இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 10 டிசம்பர், 2017

கூடுவிட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன?

Related image

(முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா, சோ ராமசாமியை சந்தித்து நலம் விசாரிக்கும் வீடியோ !)
ஆடிய ஆட்டமென்ன?
பேசிய வார்த்தை என்ன?
திரண்டதோர் செல்வம் என்ன?
கூடுவிட்டு ஆவி போனால்
கூடவே வருவதென்ன?
வாழ்க்கையின் உண்மைகளைப் பிரதிபலிக்கின்ற இந்த வரிகள் இந்த வீடியோவில் நாம் காணும் முக்கிய புள்ளிகளுக்கு  மட்டுமல்ல, இதை இன்று பார்த்துக்கொண்டிருக்கும் நம் அனைவருக்கும் பொருத்தமானவை ஆகும்.
நாம் அனைவரும் முக்கியமாக சிந்திக்க வேண்டிய விடயங்களை இவை சிந்திக்க வைக்கின்றன...
கூடுவிட்டு போகும் ஆவியோடு கூடப் போவது என்ன?
ஆம், மேற்கண்ட அனைத்தும் ஏற்படுத்திய விளைவுகளும் தாக்கங்களும் பாவங்களாகவும் புண்ணியங்களாகவும் பதிவாகி அந்த பதிவேடுதான் கூடவே வரும். இவற்றுக்கான தண்டனைகளோ பரிசுகளோ இந்தத் தற்காலிக உலகு என்பது ஒரு பரீட்சைக் கூடம் என்பதால் இங்கு காண்பிக்கப் படுவதில்லை. அவற்றை வாழ்வின் அடுத்த கட்டமான மறுமை உலகில்தான் காண உள்ளோம். நாம் தாயின் கருவறையில் இருந்த போது எவ்வாறு இவ்வுலகைக் காண முடியாமல் இருந்தோமோ அதே போல மறுமை உலகின் நடப்புகளை அங்கு செல்லும்போது அறிந்து கொள்வோம். திருக்குர்ஆன் கூறுகிறது:
3:185. ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்; எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்; இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை இவர்களைப் பற்றி பேசப்பட்டு வரும் அரசியல் ஒருபுறம் இருக்கட்டும். இவர்கள் இன்று மறைந்ததைப் போல அவையும் ஒருநாள் மறைந்து விடும்.
ஆக நமது உடல்கள் இன்று மறைந்தாலும் மறையாமல் இருப்பவை நாம் இந்த பூமியில் வாழ்ந்தபோது பதிவான பாவங்களும் புண்ணியங்களும். அதாவது இறைவனின் எவல்விலக்கல்களை எந்த அளவுக்குப் பேணி வாழ்ந்தார்கள் என்பது இறைவனிடம் பதிவாகி உள்ளன. அவை அனைத்தும் மறுமையில் இறுதித்தீர்ப்பு நாளன்று வெளியாகும். இது நம்மைப் படைத்து பரிபாலித்து வருபவனின் வாக்குறுதி:
36:12. நிச்சயமாக மரணமடைந்தவர்களை நாமே உயிர்ப்பிக்கிறோம்; அன்றியும் (நன்மை, தீமைகளில்) அவர்கள் முற்படுத்தியதையும், அவர்கள் விட்டுச் சென்றவற்றையும் நாம் எழுதுகிறோம்; எல்லாவற்றையும், நாம் ஒரு விளக்கமான ஏட்டில் பதிந்தே வைத்துள்ளோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக