Wednesday, December 13, 2017

இறைவேதத்தை மறுப்போரும் ஏற்போரும்

Image result for hell and heaven
இன்று வாழ்வோர் அனைவருக்கும் தெள்ளத்தெளிவாக விளங்கும் உண்மைகள் சில உள்ளன. அவற்றை யாரும் மறுக்கவோ மாற்றவோ முடியாது...
-    நாமாக நாம் இங்கு வரவில்லை.
-    நமது உடல் பொருள் ஆவி இவற்றின் உரிமையாளர் நாமல்ல.
-    இமாபெரும் பிரபஞ்சத்தில் மிகவும் அற்பமான பூமி என்ற ஒரு துகளின் மேல் ஒட்டிக்கொண்டிருக்கும் மற்றொரு நுண்துகள் போன்றவர்கள் நாம்.
-    நம்மை மீறிய ஒரு அதிபக்குவமான நுண்ணறிவும் அளவிலா வல்லமையும் கொண்ட சக்திதான் இந்த மாபெரும் பிரபஞ்சத்தையும் நம்மையும் நமது உடலின் உட்கூறுகளையும் அதிபக்குவமான முறையில் உருவாக்கி இடையறாது இயக்கி பரிபாலித்து வருகிறது.
-    ஆறடி உயரம் நிற்கும் அற்ப மனிதராகிய நமது ஆயுளும் நீர்க்குமிழி போல மின்னி மறைவதே.
நம்மைப்பற்றிய உண்மைகள் இவ்வாறிருக்கும்போது நம்மை மீறிய அந்த மறைவான சக்தி நம்மோடு உரையாட முற்பட்டால் அதை செவிகொடுத்துக் கேட்டு சொல்லப்படுபவை உண்மையா பொய்யா ஆய்வு செய்வதே உண்மையான பகுத்தறிவு. மாறாக அவற்றுக்கு செவிசாய்க்காமல் மனோஇச்சைக்கு வழங்கி கண்மூடித்தனமாக மறுப்பது என்பது அறிவீனமான ஒரு நடவடிக்கை என்றுதானே சொல்லமுடியும்?
= அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது, இவர்களுடைய உள்ளங்கள் மீது தாளிடப் பட்டு விட்டதா? (திருக்குர்ஆன் 47:24)

=  (நபியே!) இவ்வேதத்தை நாமே உங்கள்மீது இறக்கி வைத்தோம். இது மிக பாக்கியமுள்ளது. அறிவுடையவர்கள் இதன் வசனங்களை கவனித்து ஆராய்ந்து நல்லுணர்ச்சி பெறுவார்களாக! (திருக்குர்ஆன் 38:29)

இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் தனது இறுதிவேதமான திருக்குர்ஆன் மூலம் இன்று இவ்வுலகில் வாழும் மக்களோடு பேசுகிறான். இதை பகுத்தறிவோடு ஆராய்ந்து அதன் வழிகாட்டுதல்களை ஏற்று வாழ்வோர் இந்த வாழ்க்கையின் நோக்கம் பற்றிய தெளிவு பெறுகிறார்கள். ஆக்கபூர்வமான முறையில் இவ்வுலக வாழ்வை வாழ்கிறார்கள். மறுமையில் நிரந்தர இன்பங்கள் நிறைந்த சொர்க்கம் என்ற வாழ்விடத்தைப் பரிசாகப் பெறுகிறார்கள். மாறாக இவ்வேதத்தைக் கண்மூடித்தனமாக மறுப்ப்போர் வாழ்க்கையின் நோக்கம் பற்றிய தெளிவின்மையால் குழப்பம் நிறைந்த வாழ்வு வாழ்கிறார்கள். படைத்தவனின் கட்டளைகளை மீறிய குற்றத்திற்காக மறுமையில் வேதனைகள் நிறைந்த நரகம் என்ற வாழ்விடத்தை தண்டனையாகப் பெறுகிறார்கள்.

முன்னோர்களின் வழக்கங்களின் மீதுள்ள கண்மூடித்தனமான நம்பிக்கைகள், நாட்டுவழக்கம், தாங்களாக ஏற்படுத்திக்கொண்ட கடவுளர்கள் மீதுள்ள பக்தி, இயக்க சார்பு, அகங்காரம் போன்ற பல காரணங்களின் பொருட்டாலும்  தங்கள் இதயத்திற்குத் தாளிட்டு இவ்வேதத்தைப் புறக்கணிப்போரைப் பற்றியும் அவர்களால் வழிகெடுக்கப்பட்ட மக்களைப்பற்றியும் திருக்குர்ஆனில் இறைவன் இவ்வாறு கூறுகிறான்:
= 16:24உங்கள் இறைவன் எதை இறக்கியருளியுள்ளான்?” என்று எவரேனும் அவர்களிடம் கேட்டால், “இவையெல்லாம் முற்காலத்தவர்களின் கட்டுக்கதைகள்என்றே அவர்கள் கூறுகின்றார்கள்.
= 16:25இவ்வாறு அவர்கள் கூறுவதன் விளைவாக, மறுமைநாளில் தங்களுடைய பாவங்களை முழுமையாகச் சுமப்பதுடன், அறியாமையினால் யார் யாரை இவர்கள் வழிகெடுத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களுடைய பாவங்களையும் சுமப்பார்கள். பாருங்கள்! எப்படிப்பட்ட மோசமான சுமையை இவர்கள் சுமந்து கொண்டிருக்கின்றார்கள்!
தொடர்கதை
இன்று எவ்வாறு இறுதிவேதம் உள்ளதோ அதைப்போலவே இறைவன் இதற்கு முன்னரும் பல்வேறு காலகட்டங்களில் தன் தூதுச் செய்தியை பல்வேறு இறைத்தூதர்கள் மூலம் அனுப்பி வந்துள்ளான். அவற்றையும் மறுப்பவர்கள் இருந்தே வந்துள்ளார்கள். படைத்தவனை மட்டுமே வணங்கி வாழவேண்டும் படைப்பினங்களையும் மனிதர்களையும் வணங்குவது பாவம் என்ற இறைச் செய்தியைப் புறக்கணித்து தாங்களாக உருவாக்கியவற்றை கடவுளர்களாக பாவித்து வணங்கினார்கள். படைத்த இறைவனுக்கு முன்னால் மறுமையில் விசாரணை உண்டு, சொர்க்கமும் நரகமும் உண்டு என்று தூதர்கள் எடுத்துரைத்தபோது அவர்களை ஏளனம் செய்தார்கள். அந்தப் புனிதர்களையும் சத்தியத்தைப் பின்பற்றியோரையும் வேதனைகளும் சித்திரவதைகளும் செய்தார்கள்.  பூமியில் அட்டூழியங்கள் செய்தார்கள். குழப்பங்கள் விளைவித்தார்கள். அதர்மத்தை வளர்த்தார்கள். அவர்களின் கொடுங்கோன்மை முற்றிய நிலையை அடையும்போது இறைவன் அவர்களை அழிக்கவும் செய்துள்ளான். ஆனால் அவர்கள் செய்த பாவங்களுக்கான உண்மையான தண்டனை மறுமையில் காத்திருக்கிறது. அவர்களைப்பற்றியும் அவர்களின் மறுமை நிலை பற்றியும் இறைவன் பின்வருமாறு கூறுகிறான்:  
= 16:26இவர்களுக்கு முன்னர் வாழ்ந்த மக்களில் பலரும் (சத்தியத்தை வீழ்த்துவதற்காக இவ்வாறே) சூழ்ச்சிகளைச் செய்திருக்கின்றார்கள். ஆனால்,  இறைவன்  அவர்களின் (சூழ்ச்சிக்) கட்டிடத்தை அடியோடு பெயர்த்துவிட்டான்! மேலிருந்து அதனுடைய முகடு, அவர்களின் தலைமீது விழுந்தது. மேலும், அவர்கள் சற்றும் எண்ணிப்பாராத திசையிலிருந்து வேதனை அவர்களை வந்தடைந்தது. பிறகு மறுமைநாளில் அல்லாஹ் அவர்களை இழிவுபடுத்துவான்!
=16:27மேலும், அவர்களிடம் கேட்பான்: இப்பொழுது எனக்கு இணையாக்கப்பட்டவர்கள் எங்கே? அவர்களுக்காகத்தானே நீங்கள் சத்திய சீலர்களுடன் மோதிக் கொண்டிருந்தீர்கள்?” அறிவு வழங்கப்பட்டிருந்தவர்கள் கூறுவார்கள்: இன்று இழிவும், துர்பாக்கியமும் சத்திய மறுப்பாளர்களுக்கே!

உயிர் கைப்பற்றும்போது சரணடைதல்
= 16:28அவர்கள் எத்தகையவர்களென்றால், தமக்குத்தாமே அநீதி இழைத்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும்போது (வரம்பு மீறும் போக்கை விட்டுவிட்டு) சரணடைந்து நாங்கள் எந்தக் குற்றமும் செய்து கொண்டிருக்கவில்லையே?” என்று கூறுவார்கள். அதற்கு (வானவர்கள்) பதில் கூறுவார்கள்: செய்து கொண்டிருக்கவில்லையா...? அல்லாஹ் உங்களுடைய இழிசெயல்களை நன்கறிந்திருக்கின்றான்.

மோசமான தங்குமிடம்
= 16:29இப்பொழுது நரக வாயில்களிலே நுழையுங்கள்! அங்கே நீங்கள் என்றென்றும் வீழ்ந்துகிடக்க வேண்டும்.உண்மையில் ஆணவம் கொண்டவர்களின் தங்குமிடம் மிகவும் மோசமானதாகும்.

சத்திய சீலர்களின் உன்னத நிலை
வேதத்தை கண்மூடித்தனமாக மறுத்தோரின் மேற்கூறப்பட்ட நிலைக்கு நேர் எதிரானது வேதத்தை ஏற்று அதன்படி வாழ்ந்தோரின் நிலை.  
= 16:30(மற்றொரு புறம்) இறையச்சமுடையோரை நோக்கி வினவப்படும்: உங்கள் இறைவன் இறக்கியருளியது என்ன?” அதற்கு அவர்கள், “மிகச் சிறந்ததை (இறக்கியருளினான்)என்று மறுமொழி கூறுவார்கள். இவ்வாறு நற்செயல் புரிந்தவர்களுக்கு இவ்வுலகிலும் நன்மை இருக்கிறது. மறு உலகமோ திண்ணமாக அவர்களுக்கு மிகச் சிறப்புடையதாகவே இருக்கும். மேலும், இறையச்சமுடையவர்களின் இல்லம் மிகவும் சிறப்புடையதாகும்.
= 16:31அது நிலைத்திருக்கும் சுவனங்களாகும். அவற்றில் அவர்கள் நுழைவார்கள்; அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். அங்கு அவர்களின் விருப்பத்திற்கேற்ப அனைத்தும் கிடைக்கும். இறையச்சமுடையவர்களுக்கு இறைவன்  இவ்வாறே கூலி வழங்குகின்றான்.
உயிர் கைப்பற்றப் படும்போது சாந்தி!

= 16:32அவர்கள் எத்தகையவர்களென்றால், தூய்மையான நிலையில், அவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றுவார்கள். அப்போது வானவர்கள் கூறுவார்கள்: உங்கள் மீது சாந்தி நிலவட்டும்; நீங்கள் செய்து கொண்டிருந்த நற்செயல்களின் பலனாக சுவனத்தில் நுழையுங்கள்!

Sunday, December 10, 2017

கூடுவிட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன?

Related image

(முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா, சோ ராமசாமியை சந்தித்து நலம் விசாரிக்கும் வீடியோ !)
ஆடிய ஆட்டமென்ன?
பேசிய வார்த்தை என்ன?
திரண்டதோர் செல்வம் என்ன?
கூடுவிட்டு ஆவி போனால்
கூடவே வருவதென்ன?
வாழ்க்கையின் உண்மைகளைப் பிரதிபலிக்கின்ற இந்த வரிகள் இந்த வீடியோவில் நாம் காணும் முக்கிய புள்ளிகளுக்கு  மட்டுமல்ல, இதை இன்று பார்த்துக்கொண்டிருக்கும் நம் அனைவருக்கும் பொருத்தமானவை ஆகும்.
நாம் அனைவரும் முக்கியமாக சிந்திக்க வேண்டிய விடயங்களை இவை சிந்திக்க வைக்கின்றன...
கூடுவிட்டு போகும் ஆவியோடு கூடப் போவது என்ன?
ஆம், மேற்கண்ட அனைத்தும் ஏற்படுத்திய விளைவுகளும் தாக்கங்களும் பாவங்களாகவும் புண்ணியங்களாகவும் பதிவாகி அந்த பதிவேடுதான் கூடவே வரும். இவற்றுக்கான தண்டனைகளோ பரிசுகளோ இந்தத் தற்காலிக உலகு என்பது ஒரு பரீட்சைக் கூடம் என்பதால் இங்கு காண்பிக்கப் படுவதில்லை. அவற்றை வாழ்வின் அடுத்த கட்டமான மறுமை உலகில்தான் காண உள்ளோம். நாம் தாயின் கருவறையில் இருந்த போது எவ்வாறு இவ்வுலகைக் காண முடியாமல் இருந்தோமோ அதே போல மறுமை உலகின் நடப்புகளை அங்கு செல்லும்போது அறிந்து கொள்வோம். திருக்குர்ஆன் கூறுகிறது:
3:185. ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்; எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்; இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை இவர்களைப் பற்றி பேசப்பட்டு வரும் அரசியல் ஒருபுறம் இருக்கட்டும். இவர்கள் இன்று மறைந்ததைப் போல அவையும் ஒருநாள் மறைந்து விடும்.
ஆக நமது உடல்கள் இன்று மறைந்தாலும் மறையாமல் இருப்பவை நாம் இந்த பூமியில் வாழ்ந்தபோது பதிவான பாவங்களும் புண்ணியங்களும். அதாவது இறைவனின் எவல்விலக்கல்களை எந்த அளவுக்குப் பேணி வாழ்ந்தார்கள் என்பது இறைவனிடம் பதிவாகி உள்ளன. அவை அனைத்தும் மறுமையில் இறுதித்தீர்ப்பு நாளன்று வெளியாகும். இது நம்மைப் படைத்து பரிபாலித்து வருபவனின் வாக்குறுதி:
36:12. நிச்சயமாக மரணமடைந்தவர்களை நாமே உயிர்ப்பிக்கிறோம்; அன்றியும் (நன்மை, தீமைகளில்) அவர்கள் முற்படுத்தியதையும், அவர்கள் விட்டுச் சென்றவற்றையும் நாம் எழுதுகிறோம்; எல்லாவற்றையும், நாம் ஒரு விளக்கமான ஏட்டில் பதிந்தே வைத்துள்ளோம்.

Monday, December 4, 2017

நபிகளும் ஏசுவும் இறைத்தூதர்கள்தான் என்பதற்கு என்ன ஆதாரம்?

முகநூலில் கேள்விகள்... 
Kastro Chinna "நபிகள் நாயகம் , இயேசு போன்றவர்களை நல்ல மனிதராக நல்ல தலைவராக ஏற்றுகொள்ளலாம். ஆனால் இறைவனின் தூதராக எப்படி கருத முடியும். எந்த இறைவன் வந்து சொன்னது இவர்தான் என்னுடைய தூதரென்று..?"
Ponraj Göld  நல்லா கேளுங்க பாஸ். இதைத்தான் நானும் கேட்டேன். என்னை நாத்திகவாதின்னு சொல்றாங்க
----------------------- 
பதில் : "மிக நேர்மையான சந்தேகம். பகுத்தறிவு பூர்வமான கேள்வி. அதே பகுத்தறிவுப் பார்வையோடு உங்கள் ஆய்வு தொடரட்டும். இதற்கு பதிலாக முன்வைக்கப்படும் விளக்கங்களையும் ஆதாரங்களையும் சற்று பொறுமை காத்து படித்துவிட்டு கருத்துரை இடுங்கள். முஸ்லிம்களைப் பொறுத்தவரை மேற்படி திருக்குர்ஆனின் அடிப்படையில் இருவரையுமே இறைவனின் தூதர்கள் என்றுதான் நம்புகிறோம். திருக்குர்ஆன் இவ்வுலகைப் படைத்த இறைவனின் வாக்குகளே என்பதற்கான ஆதாரங்களை அலசும் முன்பு இதை கொண்டுவந்த நபிகள் நாயகத்தின் சுருக்கமான வரலாறை அறிவோம்.
 http://quranmalar.blogspot.in/2012/10/blog-post_19.html" திருக்குர்ஆன் மலர்கள்: நபிகள் நாயகத்தின் மிகச் சுருக்கமான வரலாறு
தொடர்ந்து திருக்குர்ஆனின் நம்பகத்தன்மையை உணர கீழ்காணும் பதிவுகளையும் படியுங்கள். நாங்கள் இதை இறைவேதமென்று நம்புவதற்கு இவையும் சில காரணங்கள்.

இறைவன் அல்லாதவற்றை வணங்குவோரின் நிலை

Related image
உடல், பொருள் ஆவி என அனைத்தையும் கொடுத்து இவ்வுலகுக்கு அனுப்பியுள்ள உண்மை இறைவனை - இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வருபவனை- கண்டுகொள்ளாமல் தான்தோன்றித்தனமாக அவன் அல்லாதவர்களையும் அல்லாதவற்றையும் கடவுளாக பாவித்து வணங்கும் செயல் பூமியில் பல குழப்பங்களுக்கும் தீய விளைவுகளுக்கும் பாவங்கள் பெருகுவதற்கும் காரணமாகிறது. இவ்வாறு படைத்த இறைவனை விட்டுவிட்டு அவன் அல்லாதவர்களை வணங்கும் செயல் இணைவைத்தல் எனப்படும். 
= உண்மை இறைவனைப்பற்றிய மரியாதை உணர்வு (seriousness) மனித உள்ளங்களில் இருந்து அகன்றுபோவதால் இறையச்சம் –அதாவது இறைவனுக்கு நான் பதில் சொல்லியாகவேண்டும் என்ற பொறுப்புணர்வு மறைந்து போகிறது. அதனால் பாவங்களில் மக்கள் துணிந்து ஈடுபடுகிறார்கள். சமூகத்தில் பாவங்கள் பெருகவும் அதர்மம் ஆளவும் இது முக்கிய காரணம் ஆகிறது.
= படைத்த இறைவனை நேரடியாக வணங்குவது என்பது எளிதானது, பொருட்செலவு இல்லாதது. ஆனால் அவன் அல்லாதவற்றை மக்கள் வணங்க முற்படும்போது இடைத்தரகர்கள் எளிதாக அங்கு நுழைந்து விடுகிறார்கள். அவரவர் கற்பனையில் உருவானவற்றைக் காட்டி இதுவே கடவுள் என்று கற்பித்து அதன்மூலம் மக்களை சுரண்ட இச்செயல் காரணமாகிறது..
= பல்வேறு மக்கள் அவரவர் கற்பனைக்கேற்ப கடவுளை சித்தரித்து வணங்கும்போது அதற்கேற்ப அவற்றை வழிபடுவோரும் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து ஒருவருக்கொருவர் ஏற்றதாழ்வு பாராட்டுவதற்கும் அடித்துக் கொள்வதற்கும் காரணமாகிறது.
= இன்னும் அகிலங்களின் அதிபதியும் சர்வவல்லமை கொண்டவனுமாகிய இறைவனை சிறுமைப்படுத்தும் செயலும் அவனுக்கு செய்நன்றி கொல்லும் செயலும் பொய்யுரைத்தலும் ஆகும்.
இதை மிகப்பெரிய பாவம் என்று கூறுகிறது குர்ஆன். மேலும்,
= அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை” (திருக்குர்ஆன் 5:72)
(அல்லாஹ் என்றால் வணங்குவதற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)
= நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணைகற்பிக்காமல் அவனை சந்திக்கிறாரோ அவர் சுவர்க்கம் புகுவார். யார் இணை கற்பித்தவராக சந்திக்கிறாரோ அவர் நரகம்புகுவார்.
அறிவிப்பு : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
இப்பாவத்தை செய்வோரின் நிலை மறுமையில் எவ்வாறு இருக்கும்?
மறுமையில் இறுதித்தீர்ப்பு நாளன்று இந்த பூமியில் வாழ்ந்து மறைந்த அனைத்து மனிதர்களும் விசாரணைக்காக மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவார்கள். அதில் இணைவைத்து வணங்கியவர்களும் இருப்பார்கள். யாரை இவர்கள் கடவுளாக பாவித்து அவர்களின் உருவச்சிலைகளை வைத்து வணங்கினார்களோ அவர்களும் அங்கு இருப்பார்கள். இன்னும் சிலர் இறந்துபோன நல்லடியார்களின் சமாதிகள் (உதாரணமாக தர்கா) அருகே நின்று அவர்களை அழைத்துப் பிரார்த்தித்து இருக்கலாம்  அவர்கள் யாவரும் அன்று விசாரணையின்போது வருவார்கள். இன்ன பிற இணைவைக்கப்பட்ட மற்ற அனைத்தும் விசாரணையின்போது ஆஜர். அப்போது என்ன நடக்கும் என்பதை இறைவன் தன் திருமறையில் கீழ்கண்டவாறு தெரிவிக்கிறான்:
10:28. (இன்னும் - விசாரணைக்காக) நாம் அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கும் நாளில் இணைவைத்தவர்களை நோக்கி: “நீங்களும், நீங்கள் இணைவைத்து வணங்கியவையும் உங்கள் இடத்திலேயே (சிறிது தாமதித்து) இருங்கள்” என்று சொல்வோம்; பின்பு அவர்களிடையேயிருந்த தொடர்பை நீக்கிவிடுவோம் - அப்போது அவர்களால் இணைவைக்கப்பட்டவைகள் ”நீங்கள் எங்களை வணங்கவேயில்லை” என்று கூறிவிடும்.
10:29. நமக்கும் உங்களுக்குமிடையே சாட்சியாக அல்லாஹ் போதுமானவன்; நீங்கள் எங்களை வணங்கியதைப் பற்றி நாங்கள் எதுவும் அறியோம்” (என்றும் அவை கூறும்).
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குரிய ஒரே இறைவன் என்பது பொருள்)
இவ்வுலகில் வாழ்ந்திருந்தபோது கண்மூடித்தனமாக நம்பியிருந்த கடவுளர்களின் உண்மை நிலை அவர்களுக்குப் புரியவரும். இவ்வுலக வாழ்க்கை தற்காலிகமானது என்பதும் மறுமை என்பதே உண்மையானது நிலையானது என்பதும் தெளிவாகப் புரியவரும். இனி மீதமிருப்பது பாவிகளுக்கு விதிக்கப்படும் நரகமோ அல்லது புண்ணியவான்களுக்கு விதிக்கப்படும் சொர்க்கமோ மட்டும்தான் என்பதும் புரியவரும். ஆனால் அப்போது புரிந்துகொள்வது காலம்கடந்த பயனளிக்காத செயலாக இருக்கும். இவ்வுலகில் மக்கள் உண்மை இறைவனது வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப செய்த தங்கள் செயல்கள் நன்மைகளாகவும் அதற்கு மாறாக செய்த செயல்கள் தீமைகளாகவும் பதிவு செய்யப்பட்டு இருப்பதைக் காண்பார்கள்.
= 10:30. அங்கு ஒவ்வொரு ஆத்மாவும் தான் செய்த செயலைச் சோதித்து (அது நன்மையா? தீமையா? என்பதை) அறிந்து கொள்ளும். பின்னர், அவர்கள் தங்களுடைய உண்மையான எஜமானாகிய அல்லாஹ்வின் பக்கமே கொண்டு வரப்படுவார்கள். அவர்கள் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டிருந்த தெய்வங்கள் அனைத்தும் அவர்களை விட்டு மறைந்துவிடும்.
இவ்வுலகிலேயே திருந்துவோம்
= நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் மீதாணையாக! மறுமையோடு ஒப்பிடும்போது இவ்வுலகின் நிலையானது, உங்களில் ஒருவர் தமது சுட்டு விரலைக் கடலில் வைப்பதைப் போன்றுதான். அதில் எந்த அளவு தண்ணீர் ஒட்டிக்கொள்கிறது என்று அவர் பார்க்கட்டும். (அந்த அளவு அற்பமானதேயாகும்.) அறிவிப்பு : முஸ்தவ்ரித் பின் ஷத்தாத் (ரலி நூல் :முஸ்லிம் (5490)

அதாவது மறுமை என்பது முடிவில்லாதது அதனோடு இவ்வுலக வாழ்வை ஒப்பிடும்போது இம்மை வாழ்வு என்பது மிக மிக மிக அற்பமானது என்பதைத்தான் மேற்படி நபிமொழி நமக்கு எடுத்துரைக்கிறது. படைப்பினங்களைப் பற்றி சிந்தித்து அவனது வல்லமையையும் உள்ளமையையும் உணரச் சொல்கிறது குர்ஆன். மேலும் அன்றாடம் மனிதன் அனுபவிக்கும் அருட்கொடைகளைப் பற்றி நினைவூட்டி படைத்தவன்பால் மனம்திருந்தியவர்களாக திரும்பச் சொல்கிறான் இறைவன்:

= 10:31. உங்களுக்கு வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிப்புலன் மீதும், (உங்கள்) பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? (அகிலங்களின் அனைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார்?” என்று(நபியே!) நீர் கேளும். உடனே அவர்கள் “அல்லாஹ்” என பதிலளிப்பார்கள்; “அவ்வாறாயின் அவனிடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டாமா?” என்று நீர் கேட்பீராக.

10:32. உண்மையாகவே அவன் தான் உங்களைப் படைத்துப் பாதுகாக்கும் அல்லாஹ்; இந்த உண்மைக்குப் பின்னரும் (நீங்கள் அவனை வணங்காவிட்டால்) அது வழிகேட்டைத் தவிர வேறில்லை; (இப்பேருண்மையை விட்டு) நீங்கள் எங்கு திருப்பப்படுகிறீர்கள்?

Saturday, December 2, 2017

நீங்கள் தோன்றிய அதிசயம்நீங்கள் எப்படி இறைவனை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள் (திருக்குர்ஆன் 2:28)
இந்த உலகில் உங்கள் முதல் இருப்பிடம் கருவறை. ஓர் உயிர் தனக்குள்ளிருந்து இன்னொரு உயிரைப் புதிதாக உருவாக்கித் தரும் அற்புத விஷயம்தான் மனிதப் பிறப்பு என்பது! அதில் நிகழும் அறிவியல் அதிசயங்கள் கொஞ்சநஞ்சமா? ஒரு சைக்கிள் தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்து ஒரு சைக்கிள்  தயாரிக்கப்பட்டு வெளிவருவதற்கு என்னென்ன தேவை என்பதை யோசித்துப் பாருங்கள்... கச்சாப்பொருட்கள், பக்குவமான இயந்திரங்கள், உபகரணங்கள், திறன் மூலம், பணியாளர்கள், பல்வேறு துறைகள் ஒருங்கிணைத்தல், திட்டமிடுதல், கண்காணிப்பு, தரக்கட்டுப்பாடு என பற்பல இன்றியமையாத தேவைகள் இருப்பதை அறிவீர்கள். அதேவேளையில் புதிதாக ஓர் உயிர் உருவாவதற்கும் அதே உயிர் மீண்டும் ஒரு உயிரை உற்பத்தி செய்வதற்கும் பின்னால் என்னென்ன தேவைகள் இருக்கும் என்பதை நம்மால் கற்பனை செய்துகூட பார்க்க முடியுமா?
எண்ணற்ற ஜீவிகளை அவற்றின் பக்குவத்தோடும் நுணுக்கங்களோடும் ஆரம்பம் முதலே படைத்தது மட்டுமல்ல பக்குவமான முறையில் அவற்றின் இனப்பெருக்கத்தையும் நிகழ்த்திக் கொண்டிருக்கும் இறைவனின் படைப்பாற்றலைப் பற்றி வியக்காமல் இருக்கமுடியுமா?
இறைவன்  எவ்வாறு முதன் முறையாகப் படைக்கின்றான் என்பதையும்பிறகு எவ்வாறு அதை மீண்டும் படைக்கின்றான் என்பதையும் அவர்கள் என்றுமே கவனித்ததில்லையா? (மீண்டும் படைப்பது எனும்) இந்தப் பணி திண்ணமாகஇறைவனுக்கு எளிதானதாகும். (திருக்குர்ஆன் 29:19)
இவ்வுலகில் மனிதன் தோன்றியது முதல் இடையறாது நடந்துவரும் மனிதப் பிறப்பு என்ற பேரற்புதத்தின் பின்னால் நடப்பவற்றை சற்று சிந்தித்துப்பாருங்கள். இந்த மாபெரும் அற்புதத்தில் பங்குகொள்ளும் உறுப்புகளின் உருவாக்கமும் இயக்கமும் பரிபாலித்தலும் இன்ன பிற விந்தைகளும் படைத்தவன் ஒருவனின்றி நடந்துவிடுமா கூறுங்கள்! நமது ஒவ்வொருவரதும் உருவாக்கத்திற்கும்  பின்னால் அமைந்துள்ள இறை அற்புதங்களை அறியும்போது அவனுக்கு நன்றி சொல்லாமல் இருக்கமுடியுமா?
ஆண் உறுப்பு எனும் அதிசயம்: விரிந்து சுருங்கும் தன்மையுடைய மெல்லிய தசைகளும் ஏராளமான ரத்தக்குழாய்களும் உள்ளடக்கிய ஆண் உறுப்பு பாலுணர்வு நிறைந்திருக்கும்போது ரத்தம் பாய்வதால் விறைப்படைகிறது: உறவுக்குப் பின் பாலுணர்வு குறைந்ததும்இந்தக் குழாய்களில் ரத்த ஓட்டம் குறைந்துவிடுவதால்பழைய நிலைக்குத் திரும்பிவிடுகிறது. 
இந்த உறுப்பின் மத்தியப் பாதைக்குச் சிறுநீர்க்குழாய் (Urethra) என்று பெயர். இது சிறுநீர்ப்பையில் இருந்து வருகிறது. இதன் ஆரம்பப் பகுதியில் விந்து ஏற்றக்குழாய்கள் இணைந்திருக்கும். இது சுமாராக 15 வயது வரை சிறுநீரை மட்டுமே வெளியேற்றுகிறது. அதற்குப் பிறகு விந்துவை வெளியேற்றும் பாதையாகவும் மாறிவிடுகிறது. சிறுநீர் வெளியேறும்போது சிறுநீரும்விந்து வெளியேறும்போது விந்துவும் மட்டுமே வெளியேறும்படியான ஓர் ஒழுங்குமுறையை கடைப்பிடிப்பது உடலியல் அதிசயங்களில் தனிச்சிறப்பு வாய்ந்த ஒன்று.
விதைப்பை : ஆணுறுப்பை ஒட்டிக் கீழ்ப்புறமாக ஒரு விதைப்பை(Scrotum) தொங்குகிறது. இதனுள்ளே இரண்டு விதைகள்(Testicles) உள்ளன. ஆண் பருவ வயதை அடைந்ததும் விந்தணுக்கள் உற்பத்தியாவது இங்குதான். ஆண்மையின் அடையாளமான மீசை வளர்வதற்குக் காரணமான டெஸ்டோஸ்டீரான் ஹார்மோனை உற்பத்தி செய்வதும் இவைதான். வெப்பம்குளிர் போன்ற தட்ப வெப்பநிலைகளிலிருந்து விதைகளைக் காப்பது விதைப்பையின் முக்கிய வேலை. 
விதைப்பையின் இரண்டு பக்கத்திலும் உள்ள விதைகளின் மேல் தளத்தில் தலா ஒரு விந்தணுக்குழாய் (Epididymis) உள்ளது. இவற்றிலிருந்து கயிறு போன்ற விந்துக்குழாய்கள்(Vasdeferens) அடிவயிற்றை நோக்கிப் புறப்படுகின்றன. இவை புராஸ்டேட்’ (Prostate) எனும் ஆண்மை உறுப்பில் உள்ள விந்து ஏற்றக்குழாயில்(Ejaculatory duct) முடிகின்றன. 
புராஸ்டேட் என்பது ஆண்களுக்கே உரித்தான ஒரு ஸ்பெஷல் சுரப்பி. இது சிறுநீர்ப்பையின் அடிப்பாகத்தில் இருக்கிறது. இதன் நடுவில் சிறுநீர்ப்பையில் இருந்து கிளம்பும் சிறுநீர்க்குழாய் செல்கிறது. விந்து ஏற்றக்குழாய்கள் இரண்டும் இந்தச் சிறுநீர்க்குழாயில் இணைந்து ஒன்றாகி,சிறுநீர் வெளித்துவாரத்தில் முடிகிறது. 
உயிரணுவின் பயணம் : விதைகளில் உற்பத்தியாகும் விந்தணுக்கள் ஒன்று சேர்ந்து அணி அணியாக விந்தணு குழாய்க்கு வந்து சேரும். பாலுறவின்போது வெளியேறுவதற்காக இவை இங்கு காத்திருக்கும். பாலுறவின்போது ஏற்படும் தசை இறுக்கங்களால்இவை அடிவயிற்றை நோக்கிவிந்து ஏற்றக்குழாய்க்கு உந்தப்படுகின்றன. சிறுநீர்ப்பைக்குப் பின்னால் விந்துக்கிடங்கு(Seminal vesicle) உள்ளது. விந்தணுக்கள் முதலில் விந்துக்கிடங்கு சுரப்போடும்பிறகு புராஸ்டேட் சுரப்போடும் கலந்து விந்து திரவமாக(Semen) மாறிவிந்து ஏற்றக்குழாய் வழியாக சிறுநீர்க்குழாயை அடைந்துசிறுநீர் வெளித்துவாரத்தில்(Urethral orifice) வெளியேறுகிறது. 
சிறுநீர்ப்பையின் அடியிலுள்ள சுருக்குத் தசைகள் பாலுறவின்போது இறுகுவதால்சிறுநீர்ப்பைக்கும் சிறுநீர்க் குழாயோடு விந்து ஏற்றக்குழாய்கள் இணையும் இடத்துக்கும் இடையில் உள்ள பாதை அடைத்துக்கொள்கிறது. இதன் பலனால்விந்து வெளியேறும்பொழுது அதனுடன் சிறுநீர் கலப்பது தடுக்கப்படுகிறது. அதுபோலவேவிந்து சிறுநீர்ப்பைக்குள் பின்னோக்கிச் செல்வதும் தடுக்கப்படுகிறது.
பெண் உறுப்புகள் எனும் பேரதிசயம் :
1. கருப்பை(Uterus):

 
பார்ப்பதற்கு கருஞ்சிவப்பு நிறத்தில் மேற்புறம் பருத்தும்கீழ்ப்பகுதி சிறுத்தும் இருக்கும் முக்கிய உறுப்பு இது. கடுமையான தசைகளால் அமைந்த இந்த வீட்டில்தான் கண்ணுக்குத் தெரியாத புள்ளியாக இருக்கும் கருமுழுக்குழந்தையாக உருவெடுக்கும் அதிசயம் நடக்கிறது. விரிவாகச் சொன்னால்கருப்பைக் குழி(Uterine cavity) என்று அழைக்கப்படும் இதன் உட்பரப்பு முக்கோண வடிவத்தில் இருக்கிறது. அதில் மெல்லிய சவ்வுப் படலம் (Endometrium) இருக்கிறது. இதில்தான் கரு புதைந்து வளர்கிறது. கருத்தரிக்காதபோதுஇந்தச் சவ்வு விரிசல்விட்டு விலகிகசியும் 
ரத்தத்துடன் கலந்து மாதவிடாயாக வெளியேறுகிறது.

2. 
கருப்பை வாய் (Cervix): 
கருப்பைக்கான உள்வாசல் இதுகருப்பையையும் ஐனனப் பாதையையும் இணைக்கிறது. முட்டையின் வெள்ளைக் கருபோல இங்கே சுரக்கும் ஒருவித  திரவம்பெண்களுக்குப் பாலுறவின் மீது ஈடுபாட்டை அதிகப்படுத்தவும்ஆணின் விந்தணுக்கள் வழுக்கிக்கொண்டு கருப்பைக்கு உள்ளே பாய்ந்து செல்லவும் வசதி செய்து தருகிறது. 

3. 
சினைப்பைகள்(Ovaries): 
கருப்பையின் இரண்டு பக்கமும் இருப்பவை சினைப்பைகள். குழந்தை உருவாவதற்குத் தேவையான சினைமுட்டையை(Ovum) மாதம் ஒன்று வீதம் இடது பக்கம்வலது பக்கம் என ஒன்று மாற்றி ஒன்றாக உற்பத்தி செய்துகருக்குழாய்க்கு அனுப்பிவைக்க வேண்டியது சினைப்பையின் வேலை. இங்கு சுரக்கும் ஈஸ்ட்ரோஜன்புரோஜெஸ்ட்ரான் ஹார்மோன்கள்தான் பெண்களின் கவர்ச்சிக்கு முக்கிய காரணமாகின்றன.
4. கருக்குழாய்கள் (Fallopian tubes):
கருக்குழாய்கள் கருப்பையின் இரண்டு பக்கமும் இருக்கின்றனசினைப்பையையும் கருப்பையையும் இணைக்கின்றன. தலா 10 செ.மீ. நீளம் உள்ள இந்தக் குழாயின் மேல்முனையில்தான் சினைமுட்டையோடு ஆணின் விந்தணு கலந்து கரு உருவாகும் அற்புதம் நடக்கிறது
.5. ஜனனப் பாதை : வஜைனா(Vagina) எனப்படும் ஜனனப் பாதைதான் கருப்பைக்கான வெளிவாசல்! 
குழந்தை பிறப்பின்போது கருப்பையிலிருந்து வெளிவரும் குழந்தையை இந்தப் பூமிக்குத் தருவதற்கு பயன்படும் முக்கிய வழியாக இது இருக்கிறது. இதன் நீளம் சுமாராக செ.மீ. அகலம்செ.மீ. இத்தனை சிறிய துளைதான் நாம் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் பிரசவத்தின்போது அகல விரிந்து பத்து மாதம் ஆன சிசுவுக்கு வழிவிடுகிறது.
கரு உருவாவது எப்படி?
ஒரு பெண்ணுக்கு மாதவிலக்கு ஆன நாளிலிருந்து 12-வது நாள் முதல் 17-வது நாள் வரைமுக்கியமனவை. ஒரு பெண்ணின் சினைப்பையிலிருந்து சினைமுட்டை வெடித்து வெளிவந்து,இந்த நாட்களில் ஏதாவது ஒருநாளில் கருக்குழாய்க்கு வந்து காத்திருக்கும். வெடித்து வெளிவந்த பின் இரண்டு நாட்களுக்குத்தான் அது உயிரோடு இருக்கும். அதற்குள் ஆணின் விந்துத்திரவம்ந்தடைந்தால்தான் விந்தணு சினைமுட்டையுடன் கலந்து கரு உருவாக முடியும். 
அப்போது ஆணின் விந்துத்திரவம் கருப்பை வாய்க்கு அருகில் கொட்டப்படும்போத இதில் உள்ள கோடிக்கணக்கான விந்தணுக்கள் எப்படியும் சினைமுட்டையை அடைந்தே தீருவது என்று தீர்மானித்துஅணிவகுத்துச் செல்லும் போர் வீரர்களைப்போல வீராவேசமாகப் புறப்பட்டு கருப்பைக்குள் நுழைவார்கள். 
கருப்பையின் உள் தூரம் செ.மீ.வரை இருக்கும். நிமிடத்துக்கு சராசரியாக மி.மீ.தூரம் என்ற வேகத்தில் நீந்திச் செல்வார்கள். பாதி தூரம் போனதும் பாதி வீரர்கள் களைப்படைந்து பயணத்தை நிறுத்திக்கொள்வார்கள். மீதிப் பேர்தான் பயணத்தைத் தொடர்வார்கள். இவர்கள் மட்டுமே மில்லி மீட்டரில் ஒரு பங்கு அளவே இருக்கும் சினைமுட்டையின் கோட்டைக் கதவைமோதிப்பார்ப்பார்கள். ஆனால்ஏதாவது ஒருவருக்குத்தான் அந்த அதிர்ஷ்டம் கிடைத்துகோட்டைக் கதவு’ திறந்து வழிவிடும். 
சினைமுட்டையை அதிர்ஷ்டக்கார மாவீரன்’ துளைத்த மறுகணமேமுட்டி மோதும் மற்ற வீரர்கள் உள்ளே நுழைவதைத் தடுக்கசினை முட்டையின் சவ்வுப் பகுதி இறுகிக் கோட்டைக் கதவைத் தாழ் போட்டு மூடிக்கொள்வது இன்னொரு அதிசயம். 
அந்த மாவீரன்  உயிரணுவின் வால் பகுதி சினைமுட்டையின் சவ்வுக்கு வெளியிலேயே நின்றுவிடநீள்வட்ட தலை மட்டும் உள்ளே போகிறது. சினைமுட்டையில் நடுநாயகமாகக் காத்திருக்கும் அதன் உட்கருவோடு கலக்கிறது. இணையும் பொழுதுதன்னிடமுள்ள 23 நிறக்கோல்களையும் அவிழ்த்துக் கொட்டி விடுகின்றது. இந்த நிறக்கோல்களில் தந்தை வழி இறங்கக்கூடிய மரபு வழிப் பொருள்கள் யாவும் அடங்கியுள்ளன. ஒரு புதிய உயிர் கருவாக உருவாகும் அற்புதம் அங்கே அரங்கேறுகிறது!
நாமே உங்களைப் படைத்தோம். எனவே, (நாம் கூறுவதை) நீங்கள் உண்மையென்று நம்ப வேண்டாமா?  நீங்கள் செலுத்துகின்ற இந்த இந்திரியத்துளியைப் பற்றி எப்போதாவது நீங்கள் சிந்தித்ததுண்டா? அதை நீங்கள் படைக்கிறீர்களாஅல்லது நாம் படைக்கின்றோமா?(திருக்குர்ஆன் 56:57-59)
= நிச்சயமாக நாம் மனிதனைக் களி மண்ணிலிருந்துள்ள சத்தினால் படைத்தோம்.. பின்னர் நாம் அவனை ஒரு பாதுகாப்பான இடத்தில் இந்திரியத் துளியாக்கி வைத்தோம். பின்னர் அந்த இந்திரியத் துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம்பின்னர் அந்த அலக்கை ஒரு தசைப் பிண்டமாக்கினோம்பின்னர் அத்தசைப்பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்பின்னர்அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம்பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம். (இவ்வாறு படைத்தவனான) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் - (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன்.(திருக்குர்ஆன் 23:12-14)